சரசரவென குறைந்த காய்கறிகள் விலை..! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, உருளை கிழங்கு என்ன விலை தெரியுமா.?

Published : Aug 30, 2023, 08:01 AM ISTUpdated : Aug 30, 2023, 08:04 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினந்தோறும் வருகிறது.  இங்கிருந்து சில்லரை விற்பனைக்காக வாங்கி கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் காய்கறி விலை குறைந்துள்ளது. 

PREV
14
 சரசரவென குறைந்த காய்கறிகள் விலை..! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, உருளை கிழங்கு என்ன விலை தெரியுமா.?
vegetable price

காய்கறிகள் விலை என்ன.?

கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து நாள்தோறும் விற்பனை விலையானது ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காய்கறி விலையை ஒப்பீடுகையில்  இன்று சற்று காய்கறி விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது

24

காய்கறிகளின் விலை குறைந்தது

உருளைக்கிழங்கை பொறுத்த வரை ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கும்,  சுரக்காய் 20 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்,  கேரட் 50 ரூபாய், கொத்தவரை 25 ரூபாய், முருங்கைக்காய் 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

34

ஒரு கிலோ தக்காளி 32ரூபாய்

கடந்த மாத வரை  உச்சத்தில் இருந்த தக்காளி விலையானது படிப்படியாக குறைந்துள்ளது தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக 200 ரூபாயில் விற்பனையாகிக் கொண்டிருந்த தக்காளி விலை, இன்றைய விலை பொருத்தவரை 32 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

44

உச்சத்தில் இஞ்சி விலை

அதேபோல இஞ்சியும் விலையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இஞ்சியானது கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  ரகங்களை பொறுத்து இஞ்சியும் விலையும் மாறுபடுகிறது. 150, 180 என்ற ரகங்களிலும் இஞ்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆச்சு! சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்குற சொன்னீங்களே என்னவானது?அண்ணாமலை

click me!

Recommended Stories