வீட்டை விட்டு வெளியே வருவதற்கே தைரியம் இல்லாத நீங்கள் குரல் கொடுத்தால் ஆட்சி மாறிவிடுமா என தவெக தலைவர் விஜய்க்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். மேலும் திருச்சியில் உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு திமுக எம்பி.கள், எம்எல்ஏ.களின் ஒருமாத ஊதியத்துடன் தனது ஒரு மாத ஊதியத்தையும் சேர்த்து ரூ.1.5 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
24
சமரசம் செய்யாத முதல்வர்
இதனைத் தொடர்ந்து பேசிய கி.வீரமணி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கம் திராவிடர் இயக்கம். திமுக அரசின் சாதனைத் திட்டங்களை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. மேலும் உலக நாடுகள் திமுக அரசின் திட்டங்களை பாராட்டுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்காமல் உழைத்து வருகிறார். இந்தியாவிலயே சமரசம் செய்து கொள்ளாத ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
34
மின்மினி பூச்சிகளால் மின்சாரத்திற்கு பாதிப்பில்லை
சுயமரியாதைக் கொள்கையோடு கடமை, கன்னியம், கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணா தந்த கோட்பாட்டோடு கலைஞர் வழியில் மக்களுக்காக உழைத்துவரும் மின்சாரம், முதல்வர் ஸ்டாலின். அப்படிப்பட்ட மின்சாரத்தை இப்போது புதிதா வரும் மின்மினி பூச்சிகளால் எதுவும் செய்ய முடியாது.
கருப்பு சட்டைக்காரனின் ஒருசொட்டு ரத்தம் இருக்கும் வரை..
சிஎம் சார் என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிவிடுமா..? தற்போது உங்களுக்கு வெளியே வர தைரியம் இல்லை. உங்களுடைய நடவடிக்கைகளை நீதிமன்றமே தோல் உரித்து காட்டியுள்ளது. இந்த ஆட்சிக்கு சவால் விடுகிறீர்களா..? கருப்பு சட்டைக்காரனின் ஒருசொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.