வீடே பத்திக்கிட்டு எரியும்போது.. சுருட்டுக்கு நெருப்பு கேக்குறீங்களா..? கரூர் விவகாரத்தில் இபிஎஸ்.ஐ அம்பலப்படுத்திய TTV

Published : Oct 04, 2025, 08:30 PM IST

கரூர் அசம்பாவித சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முனைப்பில் தமிழக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
14
தவெக பொறுப்பேற்க வேண்டும்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சியின் தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருந்தால் நீதிமன்றமே இவ்வளவு கடுமையான கருத்துகளை தெரிவித்திருக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “கரூர் விபத்து தொடர்பான தார்மீகப் பொறுப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு தான் உள்ளது. அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட கரூர் விவகாரத்தில் நிதானமாக செயல்படுகிறார். ஆனால் பதவி ஆசையில் பழனிசாமி ஆளும் கட்சிக்கு எதிரா கருத்துகளை பரப்பி வருகிறார்.

24
பழனிசாமி தலைகீழாக நின்றாலும் ஆட்சிக்கு வரமுடியாது

ஆட்சிக்கு வரவேண்டுமென டப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்றாலும் அமமுக அவரை வீழ்த்தாமல் விடாது. பழனிசாமி தரம்தாழ்ந்து பேசுவது வருத்தமாக உள்ளது. அவர் எப்பொழுதும் அப்படி தான் பேசுவார் என்பது தெரியும். அதிமுக மீதும், பாஜக மீதும் எங்களுக்கு எந்த பகையும் இல்லை. எங்களுக்கு ஒரே பிரச்சினை பழனிசாமி மட்டும் தான்.

34
முதல்வரின் செயல்பாடு..

முதலமைச்சர் சொன்னதைப் போல் எந்த தலைவரும் கட்சி தொண்டர்கள் இறப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த சனிக்கிழமை முதல் முதல்வரும், தமிழக காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன். வீடு பத்திக்கிட்டு எரியும் போது சுருட்டுக்கு நெருப்பு கேட்ட மாதிரி இந்த நேரத்தில் பழனிசாமி கூட்டணிக் கணக்கை பேசிக் கொண்டு இருக்கிறார்.

44
கரூர் விவகாரத்தில் தரம் தாழ்ந்த அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது குழு அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் அனுப்பியது ஏன்? ஆளும் கட்சி தான் இதற்கு காரணம் என பழனிசாமி பேவது தரம் தாழ்ந்த அரசியல். பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்கிறது. அதே போன்று ஆதவ் அர்ஜூனாவின் பேச்சும் பொறுப்பற்றது. கரூரில் நடைபெற்றது விபத்து தான். எந்த தலைவரும் சொந்த கட்சி தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்ற முதல்வரின் கருத்து சரியே” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories