விஜய், திரிஷாவின் உடல் நிலை பரிசோதனை செய்திடனும்!!நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? வீரலட்சுமி புகார்

First Published | May 20, 2024, 12:54 PM IST

பாடகி சுசித்ரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் கொக்கேன் பயன்படுத்தினரா என்று உடல் பரிசோதனை செய்து இந்த கொக்கேன் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது இவர்களுக்கு கொக்கேன் கொடுத்த அந்த போதை பொருள் கும்மல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரலட்சுமி வலியுறுத்தியுள்ளார். 

Suchitra

பரபரப்பை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸ்

பிரபல பின்னனி பாடகி சுசித்ரா கடந்த 2017 ஆம் ஆண்டு  "சுச்சி லீக்ஸ்" என்ற பெயரில் பல்வேறு திரை நட்சத்திரங்களின் அந்தரங்கை வாழ்க்கை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த விஷயத்தின் மூலம் பெரும் சர்ச்சைகளை சுசித்ரா சந்தித்தார். இதனையடுத்து சில ஆண்டுகள் வெளியுலகிற்கு தெரியாத வகையில் அமைதி காத்து வந்த சுசித்ரா தற்போது யூடியூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டி தான் தற்போது பரபரப்பாகியுள்ளது. 

"விஜய் வீட்டில் நடக்கும் பார்ட்டி.. குடிச்சுட்டு ஆடும் த்ரிஷா.. சிம்புவும் அப்படி தான்" - சுசித்ரா ஓபன் டாக்!

'போதையில் டான்ஸ் ஆடிய திரிஷா'

அந்த பேட்டியில் " வெளியில் தன்னை நல்லவரை போல காட்டிக் கொள்ளும் விஜயின் வீட்டில் இதுபோல பல பார்ட்டிகளில் நடந்திருக்கிறது. திரிஷாவும் இந்த கேங்கில் ஒருவர்தான், தனது பணக்கார நண்பர்களுடன் பெட் கட்டி, விஜய் வீட்டின் முன் குடித்துவிட்டு அவர் நடனமாடியதும் உண்டு.

இதையெல்லாம் யாராலும் எப்பொழுதும் மறக்கவே முடியாது."  " திரையுலகில் அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் நடிகர்  தனுஷ், வெங்கட் பிரபு, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் மீது புகார் தெரிவித்திருந்தார் . 

Tap to resize

veeralakshmi

தமிழக அரசிடம் புகார்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் கொடுத்துள்ள புகார் மனுவில், கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் இளைய சமூகம் சீர்ரழிகின்ற வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மற்றும் இன்றி இளம் சிறார்கள் மத்தியில் தடைச் செய்யப்பட்ட மிக கொடிய போதை பொருள் விஸ்த்துக்கள் வந்துள்ளது. இதனால் மாணவர்களின் உடல்நலன், கல்வி, அறிவு, நாசமாகி போகிறது. இதனால் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

TRISHA

அக்கரை இல்லாத கலைத்துறையினர்

இந்த போதைப்பொருள் குறித்து அதனால் ஏற்படும் விளைவுகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய (கலைத்துறையினர்). சினிமாத்துறையினர் துளியும் இந்த மக்கள் மீதும் இளைய சமூகத்தின் மீதும் இளைய சிறார்கள் மீதும் மாணவர்கள் மீதும் அக்கரை இல்லாததாலும் தன்னுடைய பொறுப்பை உணராமல் போனதாலும், தன்னுடைய சுப போக வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி இந்த சமூகமும், இந்த மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நமக்கு என்ன என்று எண்ணத்தோடு அலட்சியத்தோடும். 

Suchitra : தனுஷ் என்னை கற்பழித்தாரா? இஷ்டத்துக்கு எழுதுறாங்க - சொந்த சேனலில் குமுறிய பாடகி சுசித்ரா! Video!

Trisha, suchitra

கொக்கேன் பயன்படுத்திய நடிகர்கள்

பிரபல நடிகர் நடிகைகளான நடிகர் தனுஷ், விஜய், விஜய்யேசுதாஸ். திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னால் கணவர் கார்த்திக் ஆகிய இவர்கள் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கொக்கேன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பல்வேறு Youtube சேனலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் இடையே இந்த கொக்கேன் என்ற போதை பொருள் பயன்படுத்தினால் இளைய சமூகத்தின் இடையே மாணவர்கள் இடையே அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காது என்று எண்ணம் உருவாகியுள்ளது அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. 
 

Suchitra

உடல் பரிசோதனை நடத்திடுக

பாடகி சுசித்ரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் கொக்கேன் பயன்படுத்தினரா என்று உடல் பரிசோதனை செய்து இந்த கொக்கேன் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது இவர்களுக்கு கொக்கேன் கொடுத்த அந்த போதை பொருள் கும்மல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினரை பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக வீரலட்சுமி தனது புகாரில் கூறியுள்ளார்.

Latest Videos

click me!