எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார். விசிக மற்றும் சிபிஎம் கட்சிகள் இவ்வழைப்பை நிராகரித்துள்ளன. திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு நிறைவேறாதது எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த 7ம் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி: நான் பாஜகவை கண்டு பயப்படுவதாக ஸ்டாலின் கூறுகிறார். 2031 வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவிட்டு திடீரென கூட்டணி வைத்துவிட்டீர்களே என கேட்டார். அதிமுக எங்கள் கட்சி. யாருடனும் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். அதிமுகவை கண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
24
முதல்வர் ஸ்டாலின்
பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்ததும், கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அமித்ஷா சொல்லிவிட்டார். அப்புறம் எதற்கு பாஜகவை பற்றி முதல்வர் பேச வேண்டும். மாநிலத்துக்கும், மத்தியில் நடக்கும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தலைவர் ஸ்டாலின். திமுக ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என காத்திருக்கிறார்கள்.
34
விடுதலை சிறுத்தைகள் கட்சி
திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் உஷாராக இருங்கள். தொகுதிகளை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு போக முடியும்? அனைவரும் ஜால்ரா அடிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்க கூட்டணி கட்சிகளுக்கு வக்கில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். விழுப்புரத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கும், திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசங்கப்பட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா? கூட்டணியில் இருக்க வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். அதிமுக கூட்டணியில் சேருபவர்களுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம் என விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்துள்ளன. திமுக கூட்டணியில் குழப்பத்தை எற்படுத்தவே எடப்பாடி பழனிசாமி அழைக்கிறார். கூட்டணிக்கு வாருங்கள் என இபிஎஸ் சொல்வது அவர் கருத்தாக இல்லை யாரோ சொல்வதை திருப்பி கூறுகிறார். நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத்திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.