“வாங்க தம்பி” திருமாவை அன்போடு அரவணைத்த கமல்ஹாசன்! திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?

Published : Jul 17, 2025, 09:00 PM IST

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விடுதலைச்சிறுத்தைகள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

PREV
13
கமல் ஹாசனுடன் திருமா சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் குரல் கொடுக்கும் பார்வை கொண்டவர் கமல்ஹாசன்.

23
கூட்டணியில் இணைந்தது ஏன்?

கமல்ஹாசன் மதசார்பின்மையைக் காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளார். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் மிகவும் கடினமானதாக இருக்கும் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால் திமுக.வை எதிர்க்கும் கட்சிகள் தற்போது வரை கூட்டணி வடிவத்தைக் கூடப் பெறவில்லை.

33
குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முயன்று வருகிறார். நாங்கள் இடம் பெற்றுள்ள கூட்டணியை வெற்றிபெறச் செய்வது எங்கள் பொறுப்பு. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும். தமிழகமாக இருந்தாலும் சரி, தேசிய அளிவலாக இருந்தாலும் சரி மூன்றாவது அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக இல்லை. இதனை மக்களும் அறிந்துள்ளனர் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories