Vanigar Sangam Leader:வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published : Sep 10, 2024, 07:44 AM ISTUpdated : Sep 10, 2024, 07:50 AM IST

Vanigar Sangam Leader Vellaiyan: வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
Vanigar Sangam Leader:வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
vanigar sangam vellaiyan

தமிழகத்தில் ஒரே ஒரு வணிகர் சங்கமாக வெள்ளையனின் வணிகர் சங்க பேரவை மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை உடைத்து விக்ரமராஜா வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார். வெள்ளையன் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்கிற புகார் அப்போது இருந்தது. திமுக ஆட்சியில் அதிமுகவிற்கு அனுசரனையாக வெள்ளையன் செயல்பட்டதால் பல்வேறு இடங்களில் வணிகர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதனை பயன்படுத்திக் கொண்டு பேரவையை உடைத்து பேரமைப்பை உருவாக்கினார் விக்கிரமராஜா. வணிகர் சங்க பேரமைப்பு உருவான பிறகு வணிகர் சங்க பேரவை பழைய செல்வாக்கை இழந்தது.

24
Vikramaraja

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் செல்வாக்குள்ள நபராக மாறினார். இதற்கிடையே வணிகர் சங்க பேரவையை உடைத்ததில் திமுகவிற்கு பங்கு இருந்ததாக அப்போது வெள்ளையன் குற்றஞ்சாட்டினார். ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விக்கிரமராஜா பெரிய அளவில் திமுக ஆதரவை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். ஆனால் ஒரு சில விஷயங்களில் விக்கிரமராஜா திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்தார். இதற்கு காரணம் அவரது மகன் பிரபாகர் ராஜா திமுகவில் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தது தான். தற்போது விருகம்பாக்கம் தொகுதி
திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா இருந்து வருகிறார். 

இதையும் படிங்க: Quarterly Exam Holiday: காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

34
Vellaiyan Hospitalized

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவரான வெள்ளையனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து  எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுளள்து. 

44
MGM Hospital

இதுதொடர்பாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்: நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை  பெற்று வருகிறார். வெள்ளையனின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories