இலவச ஆன்மிக பயணம் எப்போது.?
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 50 லட்டத்தை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்ததாண்டு இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. 21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.
சென்னை மண்டலத்தில் உள்ள முக்கிய வைணவ கோயில்களான திருவல்லிக்கேணி. அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.