School Education Department
தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் செப்டம்பர் 20 முதல் 27ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் குழுக்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: Tamilnadu Government: தமிழக அரசு கொடுக்கும் ரூ.3,000! யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
Quarterly Exam
காலண்டு தேர்வு அட்டவணை விவரம்:
6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை:
6ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 23ம் தேதி ஆங்கிலம், 24ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைகிறது.
7ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 23ம் தேதி ஆங்கிலம், 24ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைகிறது.
8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 23ம் தேதி ஆங்கிலம், 24ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைகிறது.
இதையும் படிங்க: Teacher Shankar Profile: மகாவிஷ்ணுவை ஓட ஓட கதறவிட்ட தமிழாசிரியர்! யார் இந்த சங்கர்?
Quarterly Exam Time table 2024
9ம் மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
9ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப ஆங்கிலம், 23ம் தேதி கணிதம், 24ம் தேதி உடற்கல்வி பாடம், 25ம் தேதி அறிவியல், 26ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 23ம் தேதி கணிதம், 24ம் தேதி விருப்ப மொழிப்பாடம், , 25ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது.
இதையும் படிங்க: School Education Department: முடியவே முடியாது! ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
School Exam
11ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS), 24ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 25ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 26ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 27ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது). இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது.
Exam Schedule plus2 Student
12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 23ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது), 24ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 25ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 26ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 27ம் தேதி வேதியியல், கணக்கியல் புவியியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது.
Quarterly Exam Holiday
செப்டம்பர் 28ம் தேதி சனி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. அதன்படி, செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை, 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன் ஆகியவையாகும். இதில் ஒருநாள் வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் காலாண்டு தேர்வு விடுமுறை 3 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.