வைகோவிற்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் திடீர் அனுமதி-காரணம் என்ன.?

First Published | Nov 14, 2024, 11:24 AM IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான தகவலை துரை வைகோ தெரிவித்துள்ளார்

VAIKO AND KALAINGAR

வைகோவின் அரசியல்

திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வைகோ, அக்கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் 1992 ஆம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். வைகோவின் அதிரடி பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் திமுகவிற்கு போட்டியாக மதிமுக என்ற கட்சியை உருவாக்கிய நிலையில் வைகோ மீது கொண்ட அன்பால் திமுகவில் இருந்து ஏராளமான மூத்த நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் சரியான முடிவு எடுக்க முடியாத காரணத்தால் பின்னடைவை வைகோ சந்தித்தார்.

vaiko

 தேர்தல் புறக்கணிப்பு- வைகோவின் முடிவு

அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்ப்பது தேர்தலை தான். ஆனால் ஒரு அரசியல் கட்சியாக இருந்து சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தவறான முடிவை எடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் திமுகவிடமே மீண்டும் சென்றனர். ஒரு கட்டத்தில் திமுகவிடமே கூட்டணியையும் வைகோ வைக்கும் நிலை உருவானது. இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட வைகோ பெரும்பாலான அரசியல் நிகழ்வுகளை தவிர்த்து வந்தார். 

Tap to resize

கீழே விழுந்த வைகோ

மதிமுகவிற்கு புதிய தலைமை யார் என கேள்வி எழுந்த நிலையில், தனது மகன் துரை வைகோவை தலைமை இடத்திற்கு கொண்டுவந்தார். இந்த நிலையில் தான் கடந்த 4 மாதங்கள்ளுக்கு முன்பு வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் தோள்பட்டையில் முறிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தோள்பட்டையில் ஏற்பட்ட முறிவிற்கு ஸ்டீல் பிளேட் வைக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர், உடனடியாக தனது உடைந்த கையோடு பாராளுமன்றம் சென்று மக்களுக்காக குரல் கொடுத்து மாநிலங்களைவில் பேசினார். 

durai vaiko

மருத்துமவனையில் சிகிச்சை

இந்தநிலையில் நேற்கு இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது தொண்டர்கள் வைகோவின் உடல் நிலை என்ன ஆனது என கவலை அடைந்தனர். இந்தநிலையில் வைகோ உடல் நிலை தொடர்பாக அவரது மகன் துரை வைகோ கூறுகையில் தோள்பட்டையில் ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

Latest Videos

click me!