Unemployment Youths: வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்! வரும் டிசம்பர் 31ம் தேதி வரைக்கும் தான் டைம்!

First Published | Oct 18, 2024, 1:31 PM IST

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.7200 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அசத்தலான சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வகையில் படித்து முடித்து வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு அரசு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

2019ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என வருடத்திற்கு 7200 ரூபாய் வழங்கப்படுகிறது. 

இதையும் படிங்க: TN School Teacher: இனி ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மீண்டும் வருகிறது!

Tap to resize

விதிமுறைகள்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக  இருக்க வேண்டும். 
 

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாய், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 750 ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவுசெய்து 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமானம் வரம்பு ஏதுமில்லை.

இதையும் படிங்க:  School Student: தப்பி தவறி கூட அசால்டா இருந்திடாதீங்க! மாணவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!

உதவி தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்க கூடாது. அப்படி தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பயன்படுத்துமாறு அரசு விதிமுறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தில் அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் அலுவலக வேலைநாளில் மணிமண்டபம் எதிரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!