சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் நான் அல்ல.. விஜய்யை போட்டுத் தாக்கிய உதயநிதி! பொங்கும் தவெக!

Published : Sep 26, 2025, 02:32 PM IST

Vijay vs Udhayanidhi: சனிக்கிழமை மட்டும் வெளியில் வருபவன் நான் அல்ல என்று துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசியுள்ளார். அவருக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

PREV
14
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம்

தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மலைக்கோட்டை நகரமான திருச்சி மற்றும் அரியலூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

24
திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்

கடந்த வாரம் கருணாநிதியின் கோட்டையான திருவாரூரில் திமுகவை பொளந்து கட்டிய விஜய், சொந்த மாவட்டத்தையே முதல்வர் ஸ்டாலின் கருவாடு போல் மாற்றி விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். அதே வேளையில் விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என திமுக, நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

34
விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம்

இது மட்டுமின்றி ''விஜய் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருகிறார். மற்ற நாட்களில் ஏன் வெளியே வருவதில்லை? இப்படி பார்ட் டைம் அரசியல் செய்தால் வேலைக்கு ஆகாது'' என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு நாகையில் விளக்கம் அளித்த விஜய், ''மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது.

நாகையில் விளக்கம்

உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளாக பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம. அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி, 'சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் நான் அல்ல' என்று கூறி விஜய்யை தாக்கியுள்ளார்.

44
விஜய்யை தாக்கிய உதயநிதி

இது தொடர்பாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, ''நான் வெறும் சனிக்கிழமை மடும் வெளியே வர மாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் வருவேன். சுத்திட்டு தான் இருப்பேன். ஓ.. இன்னைக்கு வெள்ளிக்கிழமையா?'' என்று விஜய் பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக கலாய்த்து பேசினார். அப்போது அங்கிருந்தவர்கள் உதயநிதியின் பேச்சுக்கு ஆரவாரம் செய்தனர்.

உதயநிதி vs விஜய்

திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் நேரடி போட்டி என விஜய் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், வரும் தேர்தலில் விஜய் மற்றும் உதயநிதி இடையே நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சியை விஜய் வறுத்தெடுத்து வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு உதயநிதி அந்த அளவுக்கு ரியாக்சன் காட்டியதில்லை. இந்த நிலையில், முதன் முறையாக விஜய்யை தாக்கி பேசியுள்ளார். உதயநிதியின் பேச்சை பார்த்து பொங்கிய தவெகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories