தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை தக்க வைக்க கட்சிகள் முயன்று வரும் நிலையில், பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து பல்டி அடித்துள்ளனர்.
இதன் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு பல முறை நயினார் நாகேந்திரனை தொடர்பு கொண்ட நிலையில், அவர் தனது அழைப்பை எடுக்கவே இல்லையென ஆதாரங்களோடு தனது அதிருப்தியை தெரிவித்தார்.