நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், மருமகளுடன் கள்ளக்காதல் வைத்திருந்த உறவினரை தட்டிக்கேட்ட மாமனார் விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உறவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் சேலூர்நாடு ஊராட்சி பள்ளக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கசாப்பு செல்வராஜ் (55). இவரது மகன் விஜயகுமார். விவசாயம் செய்து வருகிறார். செல்வராஜ் வீட்டிற்கு, அவரது பெரியப்பா மகன் காசி துரைசாமி (48) அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, விஜயகுமாரின் மனைவி சந்திராவுக்கும், காசி துரைசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
24
வேதனையில் கணவர்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் விஜயகுமாருக்கு தெரியவந்ததை அடுத்து தந்தையிடம் சொல்லி மகன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் மகனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து காசி துரைசாமியை கண்டித்துள்ளார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
34
போதையில் தகராறு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குழிக்காடு டிரான்ஸ்பார்மர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, போதையில் அந்த பக்கமாக வந்த காசி துரைசாமியை அழைத்து, மருமகளுடன் வைத்துள்ள கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது, காசி துரைசாமி அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்திநாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காசி துரைசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியை பிரிந்து தனியாக பிரிந்து வசித்து வந்து காசி துரைசாமி, அண்ணன் என்ற முறையில் அடிக்கடி செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு வந்த நிலையில் கள்ளக்காதலாக மாறி அது கொலையில் முடிந்துள்ளது.