அதிமுக.வின் நிரந்தர பொதுச்செயராளர் ஈபிஎஸ்..! அது தான் எங்களுக்கும் ஈசி.. நிர்வாகிகள் மத்தியில் கலகலத்த உதயநிதி

Published : Sep 10, 2025, 03:14 PM IST

அதிமுக.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் தொடர வேண்டும். அப்போது தான் நாங்கள் எளிதாக வெற்றி பெற முடியும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
13
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பழனிசாமி

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பேருந்தில் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த கூட்டம் ஒன்றில் ஆம்புலன் ஒன்று சென்றுள்ளது. அந்த ஆம்புலன்ஸை நிறுத்திய பழனிசாமி ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

23
பழனிசாமிக்கு கொலை மிரட்டல்?

அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலைமையில் தான் உள்ளது. பாஜக.வின் அறுவை சிகிச்சையால் அதிமுக அறுவை சிகிச்சையில் இருக்க வேண்டிய நிலைமை வரும். அப்போது நாங்கள் தான் உங்களை காப்பாற்ற வேண்டிய நிலை வரும் என்று கூறினேன். இப்படி சொன்னதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறேன் என்று சொல்கிறார்.

33
அதிமுக.வின் நிரந்தர பொதுச் செயலாளர்

நான் எடப்பாடி பழனிசாமியை சொல்லவில்லை. அவர்களது கட்சியை தான் சொன்னேன். நீங்கள் 100 ஆண்டுகள் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும். நீங்கள் தான் உங்கள் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் அது தான் உங்கள் கட்சிக்கும் நல்லது. எங்களுக்கும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். அதிமுக தொண்டர்கள் இதனை வலியுறுத்துவார்களா என தெரியவில்லை. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள் தான் அதிமுக.வின் நிரந்தர பொதுச் செயலாளர்” என்று பேசினார்.

Read more Photos on
click me!

Recommended Stories