20 மாநிலங்களில் மிக கனமழை எச்சரிக்கை! தமிழகத்துக்கு ஷாக் கொடுத்த இந்திய வானிலை மையம்

Published : Sep 10, 2025, 02:29 PM IST

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு சுமார் 20 மாநிலங்களில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

PREV
13
இந்தியாவில் வெளுத்து வாங்கும் கன மழை

வட மாநிலங்களில், குறிப்பாக இமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக் கடலில் நிலவக்கூடிய காற்றழுத்தம் வலுவடைவதால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வட இந்தியா முழுவதும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணித்துள்ளது. இமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

 அடுத்த 5 நாட்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 20 மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

23
20 மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை

வடகிழக்கு பகுதிகள்

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா பகுதிகளில் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்கள்

அடுத்தாக மேற்கு மத்யபிரதேசம், சத்தீஸ்கர், பீஹார், ஜார்கண்ட், ஒடிசா பகுதிகளில் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பலத்த மழை பெய்யும். மேலும் சப்-ஹிமாலயன் மேற்கு வங்காளம், சிக்கிம் பகுதிகளில் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

வடமேற்கு இந்தியா

கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33
இடியுடன் கன மழை

மேற்கு மாநிலங்கள்

மத்யபிரதேசம், மராத்துவாடா, கோங்கண் & கோவா, குஜராத் பகுதிகளில் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மழை பெய்யும். மராத்துவாடா, கோங்கண், மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் 13, 14ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகம், கேரளா- மழை எச்சரிக்கை

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா & தெலுங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோர ஆந்திரா மற்றும் யானம் பகுதிகளில் 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories