இந்நிலையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட டாஸ்மாக் கடைகள் இயங்கும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களாகும். அதுமட்டுமல்லாமல் முக்கியமான தலைவர்களின் நினைவு தினம், கோவில் திருவிழா போன்ற தினங்களில் அந்தந்த மாவட்டங்களின் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.