ராஜ வாழ்க்கை வாழும் உதயநிதி ஸ்டாலின்.... அடேங்கப்பா அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Nov 27, 2025, 09:55 AM IST

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் கார் கலெக்‌ஷன் பற்றி பார்க்கலாம்.

PREV
14
Udhayanidhi Stalin Net Worth

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கும் உதயநிதி, அரசியலுக்கு வரும் முன்னர் சினிமாவில் பயணித்து வந்தார். இவர் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி கடந்த 2008-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து கமலின் மன்மதன் அம்பு, சூர்யா நடித்த ஆதவன், ஏழாம் அறிவு என தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

24
உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணம்

இதையடுத்து ஹீரோவாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2012-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் அடுத்தடுத்து நடித்து வந்தார். சுமார் 11 ஆண்டுகள் ஹீரோவாக பயணித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, நெஞ்சுக்கு நீதி, சைக்கோ, மாமன்னன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் மாமன்னன். கடந்த 2023ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகினார் உதயநிதி.

34
அரசியல் எண்ட்ரி

சினிமாவுக்கு வந்த புதிதில் அரசியல் பக்கம் தலைகாட்டவே மாட்டேன் என கூறிவந்த உதயநிதி, கடந்த 2019-ம் ஆண்டுமுதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். பின்னர் 2022-ம் ஆண்டு அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2024-ம் ஆண்டு துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார் உதயநிதி. சினிமாவை போல் அரசியலிலும் குறுகிய காலகட்டத்தில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் உதயநிதி.

44
சொத்து மதிப்பு

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுகவினர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.33 கோடியாம். இவரது மனைவி பெயர் கிருத்திகா. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இன்பநிதி என்கிற மகனும், தன்மயா என்கிற மகளும் உள்ளனர். கார் பிரியரான உதயநிதியிடம் ஹம்மர், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories