கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிரா பேச மாட்டேன்.. நாஞ்சில் சம்பத்தின் சபதத்தால் கலங்கும் திமுக, அதிமுக

Published : Nov 27, 2025, 09:07 AM IST

கோடி ரூபாய் கொடுத்தாலும் தவெக தலைவர் விஜய் விமர்சிக்க மாட்டேன். அவர் மீது எனக்கு மதிப்பு இருப்பதாக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

PREV
14
நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்

மதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தார். நாஞ்சில் சம்பத்தின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு ஜெயலலிதா இன்னோவா கார் பரிசாக வழங்கியதும் தமிழக அரசியலில் பேசு பொருளாக அமைந்தது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரன் அணி, திமுகவுக்கு ஆதரவு போக்கு என மாறுபட்ட முடிவுகளைத் தொடர்ந்து அவர் தற்போது எந்த கட்சியிலும் இல்லை.

24
திமுக மீது குற்றச்சாட்டு

இதனிடையே அண்மையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட அறிவுத் திருவிழாவில் தன்னை அழைக்கவில்லை என்பதால் திமுக மீது கோபமடைந்தார். மேலும் அறிவுத் திருவிழாவில் அறிவார்ந்தவர்கள் யாரும் பெரிதாக கலந்துகொண்டு பேசியதாக தெரியவில்லை என குற்றம் சாட்டினார்.

34
திமுகவினர் என்னை கசக்கி எறிந்துவிட்டனர்

இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “என் பெயர் சம்பத், என் அண்ணன் பெயர் கருணாநிதி, என் தம்பியின் பெயர் ஸ்டாலின். இப்படி திமுகவுக்காகவே பிறந்தவன் நான். கடந்த காலங்களில் திமுகவுக்காக பல மேடைகளில் பேசியுள்ளேன். ஆனால் தற்போது என்னை கசக்கி எறிந்துவிட்டனர்.

44
கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிராக பேசமாட்டேன்..

தம்பி விஜய்யை எதிர்த்து பேசும் எண்ணம் எனக்கு கிடையாது. அவர் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்யை எதிர்த்து பேச மாட்டேன். விஜய் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆதரவாக பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். நஞ்சில் சம்பத்தின் கருத்தால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சற்று பதற்றம் அடைந்துள்ளது. காரணம் சம்பத்தின் பேச்சு திறமை அப்படிப்பட்டது. திமுக, அதிமுக, மதிமுக என அனைத்து கட்சியிலும் இவர் நட்சத்திர பேச்சாளராக பணியாற்றி உள்ளார். அப்படிப்பட்ட நபர் விஜய்க்கு ஆதரவாக வேலை செய்யம் பட்சத்தில் அது தவெகவுக்கு கூடுதல் பலமாக அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories