சென்னையை திமுக கோட்டையாக்க ஸ்கெட்ச் போட்ட உதயநிதி.! வெளியான அதிரடி அறிவிப்பு
சூடு பிடிக்கும் அரசியல் களம்
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், 2026ஆம் ஆண்டை இலக்காக வைத்து களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், எனவே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் யாருடன் கூட்டணி.? எந்த கட்சி எப்போது பல்டி அடிக்கும் என பலவித கேள்விகள் எழுந்துள்ளது.
அந்த வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுகவும், அதிமுகவும் திட்டம் போட்டு செயல்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொரு கட்சியும் தங்கள் அணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே அதிமுகவை பொறுத்தவரை தவெகவை இழுக்க திட்டமிட்டுள்ளது.
DMK election strategy
திமுக- அதிமுக கூட்டணி நிலை என்ன.?
எனவே அதிமுகவுடன் - தவெக இணைந்தால் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் போட்டியாக இருக்கும். தற்போது உள்ள நிலையில் அதிமுக, தவெக, பாஜக, பாமக என தனித்தனி அணியாக உள்ளது. இதனால் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுகவிற்கு சாதகமான நிலை உள்ளது.
இதனை அப்படியே 2026ஆம் ஆண்டு தேர்தல் வரை கொண்டு செல்ல திமுக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவானது 200 தொகுதிகளில் திமுக சின்னம் போட்டியிட முடிவெடுத்துள்ளது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கிய தொகுதியை விட குறைவான தொகுதிகளை ஒதுக்கவே திட்டமிட்டுள்ளது.
DMK youth wing
திமுகவிற்கு வலு சேர்க்க உதயநிதி திட்டம்
அந்த வகையில் தமிழகம் முழுவதும் திமுகவை வலுப்படுத்த இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை வலுப்படுத்த தேர்வானது நடைபெறுகிறது. மேலும் களத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர்களுக்கு மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில்,
Udhayanidhi Stalin
புதிய நிர்வாகிகள் நியமனம்
கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள், தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
DMK election strategy
இளைஞர் அணி நிர்வாகிகள் அறிவிப்பு
இதுவரை 14 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.