தேசிய கொடியை அவமதித்தாரா உதயநிதி.! வெளியான புகைப்படத்தால் சர்ச்சை

First Published | Jan 26, 2025, 9:21 AM IST

76வது குடியரசு தின விழாவில், சென்னை மெரினா கடற்கரையில் கொடியேற்றும் நிகழ்வில் ஆளுநர் ரவி கொடியேற்றினார். விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி தேசிய கொடியை சட்டையின் வலது புறம் குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கொடியை அவமதித்தாரா உதயநிதி.! வெளியான புகைப்படத்தால் சர்ச்சை

குடியரசு தின விழா

76 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக சென்னை மெரினா கடற்கரை சாலையில்  கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். முன்னதாக ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்கு காவலர்கள் மோட்டார் பைக் அணிவகுத்து அழைத்த வரப்பட்டனர். அப்போது ஆளுநர் ரவிக்கு முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்,

Republic Day

தேசிய கொடியை ஏற்றிய ஆளுநர்

இதனையடுத்து தேசிய கொடியை ஆளுநர் ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக அரசு சார்பாக வீர தீர செயலுக்கான பதக்கம், மத நல்லிணக்கத்திற்கான விருது. நெல் உற்பத்தி திறனுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிறகு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, தமிழக அரசின் சாதனையை விளக்கும் அலங்கார ஊர்திகள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளையும் கண்டு ரசித்தனர். 


Republic Day celebrations

தேசிய கொடி சர்ச்சை

இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், துணை முதலமைச்சர்  உதயநிதி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களும் குடியரசு கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில் தேசிய கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி அவமதித்தாக புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் உதயநிதி தேசிய கொடியை தனது சட்டையின் இடது புறம் குத்தாமல் வலது புறம் குத்திய நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டிருந்தார்.

UDHAYANIDHI controversy

அவமதித்தாரா உதயநிதி.?

இந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி உதயநிதியின் சட்டையின் இடது புறத்தில் திமுகவின் கொடி பறித்த சின்னம் இருந்த நிலையில் வலது பக்கத்தில் தேசிய கொடியை உதயநிதி குத்தியுள்ளார். தேசிய கொடியை எப்படி குத்த வேண்டும், எந்த பக்கம் குத்த வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் தேசிய கொடியை சட்டையின் இடது புறம் மட்டுமே அணிய வேண்டும். வலது புறத்தில் அணியக்கூடாது என்பது விதியாகும். எனவே இந்த விதியை உதயநிதி மறந்தாரா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

National flag controversy

பாஜக கண்டனம்

இது தொடர்பாக பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி  இந்திய தேசிய கொடியை  சட்டையின் இடதுபுறத்தில் அணியாமல் வலது பக்கம் அணிந்து அவமதித்துள்ளார். பாரத திருநாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதையே வாடிக்கையாக கொண்டு தி.மு.க-வினர் செயல்படுகின்றனர். வெட்கப்படுங்கள் உதயநிதி  என கூறியுள்ளார். 
 

Latest Videos

click me!