Published : Jan 25, 2025, 08:47 PM ISTUpdated : Jan 25, 2025, 08:49 PM IST
2025ம் ஆண்டிற்கான ரேஷன் கடைகளின் விடுமுறை நாட்கள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. தமிழக முழுவதும் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் மூலமாக 7 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 572 பயனாளிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
25
Tamilnadu Government
இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விடுமுறையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் விடுமுறை தினத்தில் திருத்தம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட விடுமுறை தின பட்டியல் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), தைப்பூசம் பிப்ரவரி 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை), தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), ரம்ஜான் மார்ச் 31-ம் தேதி (திங்கட்கிழமை), மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 10-ம் தேதி (வியாழக்கிழமை), தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி (திங்கட்கிழமை), புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை), மே தினம் மே 1-ம் தேதி (வியாழக்கிழமை).
45
ration shop holidays 2025
பக்ரீத் ஜூன் 7-ம் தேதி (சனிக்கிழமை), மொகரம் ஜூலை 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), சுதந்திர தினம் ஆகஸ்டு 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை), கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்டு 16-ம் தேதி (சனிக்கிழமை), விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27-ம் தேதி (புதன்கிழமை), மிலாடி நபி செப்டம்பர் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை), ஆயுத பூஜை அக்டோபர் 1-ம் தேதி (புதன்கிழமை), விஜயதசமி, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2-ம் தேதி (வியாழக்கிழமை), தீபாவளி அக்டோபர் 10-ம் தேதி (திங்கட்கிழமை), கிறிஸ்துமஸ் டிசம்பர் 25-ம் தேதி (வியாழக்கிழமை).
மேலும், பொது வினியோகத் திட்டத்தின் கீழான அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தொடர்பான அவசியம் சார்ந்து மேற்கண்ட விடுமுறை நாட்கள் குறித்து தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் அல்லது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனரகத்தால் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.