அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி! தனியார் மருத்துவமனையில் அனுமதி! நலம் விசாரித்த கே.என்.நேரு!

Published : Jan 25, 2025, 05:35 PM IST

திருச்சி விமான நிலையம் வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PREV
14
அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி! தனியார் மருத்துவமனையில் அனுமதி! நலம் விசாரித்த கே.என்.நேரு!
Minister Raghupathi

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்புசட்டம் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து வந்தார். தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

24
Kauvery Hospital

இந்நிலையில் இன்று அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனே பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவு பெற்றதாகவும் தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
Raghupathi

இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் திமுக பிரமுகர்கள் அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். திமுக அமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மற்றும் அவரதுது அதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

44
Minister Ragupathi News

இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த 1991, 2016  சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து 2021ல் நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் அதிமுகவில் இருந்து வந்தவர். 

Read more Photos on
click me!

Recommended Stories