தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! அவகாசமும் நீட்டிப்பு!

Published : Jan 25, 2025, 01:37 PM ISTUpdated : Jan 25, 2025, 03:44 PM IST

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும். 

PREV
15
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! அவகாசமும் நீட்டிப்பு!
School Student

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கவும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குத் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS-National Means-cum-Merit Scholarship Scheme) மத்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். 

25
NMMS Exam

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? கேள்வி கேட்பது யார் தெரியுமா?

35
NMMS Scholarship Exam

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உஷார்! அலறியபடி எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

45
NMMS Scholarship Exam 2025

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2024-25ம் ஆண்டிற்கான தேசிய வருவாய்  மற்றும் தகுதி  படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் மற்றும் கட்டண தொகை செலுத்துவதற்கு கடைசி நாள் ஜனவரி 25ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

55
scholarship

தற்போது மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 29ம் தேதி மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரத்தினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories