தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயருகிறதா? உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

First Published | Jan 25, 2025, 12:21 AM IST

டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

private bus

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிாகத்தில் பேருந்து கட்டணம் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் டீசல் விலை உயர்விற்கு ஏற்ப பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

chennai high court

அதில் கடந்த 2018-ம் ஆண்டு பேருந்துகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போது, டீசல் லிட்டருக்கு 63 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கேரளாவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 1.10 ரூபாயும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் 1 ரூபாய் 8 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரு கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கர்நாடகாவிலும், கேரளாவிலும் ஓரு கி.மீ தூரத்திற்கு ரூ.1க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் 58 பைசா வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

private Bus

அரசு தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் அடங்கிய உயர்மட்டக் குழு, நியமித்து 2024-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Latest Videos

click me!