pongal gift
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் வாழும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடிடும் வகையில் தமிழக அரசு சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை, பச்சரிசி, சக்கரை, வெட்டி, சேலை மற்றும் முழு கரும்பு வழங்கப்படுகிறது.
Pongal gift package
புறக்கணித்த மக்கள்
எனவே இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் ரொக்கமாக பணம் வழங்காத காரணத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து 26லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆயிரம் ரூபாயை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்" எனவும்,
Pongal gift package
2கோடியே 21 லட்சம் மக்களுக்கு பரிசு தொகுப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.அதன்படி. கடந்த 09.01.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Tamil Nadu Pongal gift
புறக்கணித்த 12 சதவிகித மக்கள்
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 25.01.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 94 லட்சத்து 15 ஆயிரத்து 346 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 88 சதவீதம் பேருக்கு நிறைவுபெற்றுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்கள்.