இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபிக்கு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,
இன்று டிஜிபியை நேரில் சென்று சந்தித்து கடிதம் அளிக்க இருப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களிட்ம கூறுகையில், நேற்று விஜய் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். அப்போது எல்லோரும் உங்கள் மீது தவறும் இல்லை. நீங்கள் தைரியமாக இருங்கள். விடாதீங்க, தொடர்ந்து பைட் செய்யுங்கள். உங்களுடன் நாங்கள் இருப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் கரூர் செல்வதற்காக தேவையான பாதுகாப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த காவல்துறையிடம் கேட்டுள்ளோம். எனவே பாதுகாப்போடு மக்களை விஜய் சந்திப்பார் என அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.