விஜய் அரசியலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்... அண்ணாமலை புத்திசாலி: ரஜினி சகோதரர் பரபரப்பு பேட்டி

Published : Jul 20, 2025, 07:44 PM IST

நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி என்றும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புத்திசாலி என்றும் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார். விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம், அண்ணாமலை நன்றாக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

PREV
14
சத்தியநாராயண ராவ் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றும், அதேசமயம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புத்திசாலி என்றும் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கரும்பிள்ளை மடம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் சத்தியநாராயண ராவ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் களம் குறித்து அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

24
அரசியலில் விஜய் ஜெயிப்பது கஷ்டம்

முதுகுளத்தூர் அருகே உள்ள கரும்பிள்ளை மடம் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேக விழாவின் பரிகார ஹோமத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சத்தியநாராயண ராவ் இன்று பங்கேற்றார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழக அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்" என்றார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நடிகர் விஜய் அரசியலில் நுழைந்திருக்கும் நிலையில், அவரது எதிர்காலம் குறித்து ரஜினியின் சகோதரர் இவ்வாறு பேசியிருப்பது முக்கிய விவாதத்தை எழுப்பி உள்ளது.

34
அண்ணாமலை புத்திசாலி

அதே மூச்சில், "ஆனால், அண்ணாமலை புத்திசாலி, அவர் மிகவும் நன்றாக வருவார்," என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசினார். வரும் காலங்களில் அண்ணாமலை தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அடைவார் என்றும் அவர் பேசினார். இது தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

44
ரஜினிக்கு கவர்னர் ஆகும் வாய்ப்பு வந்தது

மேலும், நடிகர் கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரஜினிகாந்த் எம்பியாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அதெல்லாம் தேவையில்லை, அவர் கவர்னராக பொறுப்பேற்க வாய்ப்பு வந்தது. அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எம்பி எல்லாம் வேண்டாம்" என்று திட்டவட்டமாக மறுத்தார். ரஜினிகாந்த் அரசியல் பதவி வகிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சத்தியநாராயண ராவின் இந்தக் கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories