அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக

Published : Apr 21, 2025, 10:38 AM ISTUpdated : Apr 21, 2025, 12:39 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் கோயம்புத்தூரில் ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது 23 மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களோடு விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார்.

PREV
14
அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக
TVK Vijay

TVK Vijay meeting of district secretaries : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட களம் இறங்கியுள்ளார். அதன் படி கோவையில் 23 மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.  

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது. 

24
Tamil Nadu victorious party

கோவையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம். தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக,

நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில். குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.

34
Meeting of district secretaries

மாவட்ட செயலாளர்களோடு ஆலோசனை

இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பங்கேற்பார்கள். இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

44
Vijay met 23 district secretaries in Coimbatore

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம். வாகை சூடுவோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories