ஹெல்மேட் இல்லைனா இனி சஸ்பெண்ட் தான்.! போலீசாருக்கு பறந்த உத்தரவு- செக் வைத்த டிஜிபி

Published : Apr 21, 2025, 10:25 AM IST

சாலை விபத்துகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு எதிராக தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

PREV
14
ஹெல்மேட் இல்லைனா இனி சஸ்பெண்ட் தான்.! போலீசாருக்கு பறந்த உத்தரவு-  செக் வைத்த டிஜிபி

Police officers suspended for not wearing helmets: DGP orders action! நாளுக்கு நாள் நவீனமயமாகும் உலகில், வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,  போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி இளைஞர்கள் அதி வேகமாக பைக்கை இயக்குகிறார்கள்.

இதன் காரணமாக பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்தில் ஹெல்மேட் அணியாமல் விபத்தில் சிக்கி  தலையில் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் உயிரிழப்பும் நிகழ்கிறது.

24
Police officers suspended

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக  சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். எனவே ஹெல்மேட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மேட் அணியவில்லையென்றால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விதிமுறைகளை அறிவித்த காவல்துறையினரே ஹெல்மேட் அணியாமல் பைக்கில் செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது.
 

34
Helmet mandatory

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவ்வப்போது போலீசாரும் ஹெல்மேட் அணியாமல் விபத்தில் சிக்கும் நிலையும் தொடர்கிறது. இதனையடுத்து ஹெல்மேட் அணியாமல் செல்லும் போலீசாருக்கு செக் வைக்கும் வகையில் தமிழக டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

44
police suspension

இதனையடுத்து மாநிலம் முழுதும் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், 'வாக்கி டாக்கி' வாயிலாக, போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  எனவே காலையில் பணிக்கு வரும்  போலீசார் வருகைப்பதிவு சரி பார்க்கப்படும் ரோல்காலில், பைக்கில் பணிக்கு வந்த போலீசார், தங்களிடம் ஹெல்மெட் இருப்பதை உயர் அதிகாரிகளிடம் காண்பித்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories