கடினமான தருணத்தை கடந்து வருவோம்.. அனுமதி கிடைத்ததும் நிச்சயம் சந்திப்போம்.. உருக்கமாக கடிதம் எழுதிய விஜய்

Published : Oct 18, 2025, 09:57 PM IST

இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தை கடந்து வருவோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயம் சந்திப்போம் என கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

PREV
13
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும்..

தவெக தலைவர் விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு வணக்கம்.

கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சுழலில் உங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்.

23
நிச்சயம் சந்திப்போம்

சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக அதற்கான சட்ட ரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம்.

33
இறைவன் அருளால் கடினமான தருணத்தை கடந்து வருவோம்

இதனிடையே நாம் ஏற்கனவே (28.09.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துக் கொள்வோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தை கடந்து வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories