செப்.13 டூ டிச.23: 102 நாட்கள்..! தொகுதி வாரியாக பிரச்சினைகளை புட்டு புட்டு வைக்க தளபதி பிளான்

Published : Sep 04, 2025, 05:24 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 13ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
விஜய் சுற்றுப்பயணம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விழுப்புரம், மதுரை என இரு மாவட்டங்களிலும் வெற்றிகரமாக பிரமாண்ட மாநாட்டை நடத்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

24
13ல் தொடங்கும் பிரசாரம்

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக் கொள், மக்களுக்காக திட்டங்களை உருவாக்கு என்று பேசிய நிலையில் வருகின்ற 13ம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி 13ம் தேதி திருச்சியில் விஜய் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார்.

34
திருச்சியில் தொடங்கும் விஜய்யின் பயணம்

கட்சி தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் எந்தவித நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வருகின்ற 13ம் தேதி தொடங்கும் விஜய்யின் சுற்றுப்பயணம் டிசம்பர் 23ம் தேதி மதுரையில் நிறைவு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
தொகுதி வாரியாக பிரச்சினைகள் குறித்து பேசும் விஜய்

தனது சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதி வாரியாக பிரச்சினைகளைப் பட்டியலிட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் இந்த சுற்றுப்பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories