இந்த திட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, பூந்தமல்லி - சுங்குவார் சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்துக்கு, ₹8,779 கோடி மதிப்பில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக, தமிழக அரசு முதல்கட்டமாக ₹2,126 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.