பாம்பு கடிக்கு மருந்தே தேவையில்லை... சீமானுக்கு மனநிலை பரிசோதனை செய்யுங்க- கொதிக்கும் விஜய் கட்சி

Published : Sep 03, 2025, 08:45 AM IST

பாம்பு கடித்தால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை என சீமான் கூறியதற்கு எதிர்ப்பு. தவெக பிரமுகர் பாலசுப்பிரமணியன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சீமானின் கருத்து உயிருக்கு ஆபத்தானது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
பாம்பு கடித்தால் கத்த கூடாது

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களை காப்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேள், பாம்பு கடித்தால் கத்த கூடாது. ஒரே இடத்தில் இருக்க வேண்டும். 

தண்ணீருக்குள் கடித்த இடத்தை வைத்தால் விஷம் ஏறாது. பயந்து கத்தினால் உடனே விஷம் உடலில் ஏறி விடும் என தெரிவித்து இருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையே ஏற்படுத்தி இருந்தது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சீமானுக்கு எதிரான கண்டனங்களை எழுப்பினர். 

23
தண்ணீர் கழுவினால் போதும்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெக பிரமுகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தவெக பிரமுகருமான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பு கடித்தால் எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என்றும் இயற்கையாகவே உயிர் பிழைக்க முடியும் என்றும் பொதுவெளியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

33
சீமானுக்கு மனநிலை சிகிச்சை அளியுங்கள்

இது ஒரு முற்றிலும் தவறான, அறிவியல் விரோத மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கருத்து என தெரிவித்தார். சீமானின் இத்தகைய பேச்சுகள், பொதுமக்களின் உயிரைப் பணயம் வைப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் குழப்பத்தையும், தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்துவதாக கூறினாரா.்

எனவே பாம்பு கடிக்கு சிகிச்சை தேவையில்லை என்ற கருத்தால் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயபடும் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த மனநிலை ஒரு பொறுப்பான தலைவருக்கு இருக்க வேண்டிய மனநிலையில் இருந்து விலகி இருப்பதாக கருதுகிறன். எனவே அவரது மனநலப் பரிசோதனை அத்தியாவசியமானது. சீமான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என என்று தவெக பிரமுகர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories