அடிதூள்.! பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை.! விண்ணப்பிக்க கெடு விதித்த அரசு

Published : Sep 03, 2025, 08:23 AM IST

தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார உதவிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கும் திட்டம் 

PREV
14
பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்

தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் கல்வி, ஊட்டச்சத்து, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தி, கல்வி சேர்க்கையை ஊக்குவிக்கப்படுகிறது. 

மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுமைப் பெண் திட்டம் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை ஊக்குவித்தல் மற்றும் குறைந்த வயதில் திருமணங்களைக் குறைக்க வழி வகை செய்கிறது. அந்த வகைநில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் பெண் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

24
மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்

தமிழ் புதல்வன் திட்டம் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் ஆண் மாணவர்கள் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 இது மட்டுமில்லாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு - சீருடை (1-8 வகுப்பு), இலவச பாடப்புத்தகங்கள் (1-12 வகுப்பு) புத்தகப்பை (1-12) காலணிகள் (1-10) கணித உபகரணம் (6-10) வண்ணப் பென்சில்கள்/கிரையான்கள் (1-5). ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

34
கல்வி உதவித்தொகை திட்டம்

இந்த நிலையில் தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வின் மூலம் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ. 1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

44
"தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு"

எனவே இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (04.09.2025) இன்றைக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ. 50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories