TTV Dhinakaran: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி என்றும், அதிமுகவிற்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்றும் டிடிவி தினகரன் கணித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி. தவெக வருகையால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 3வது இடம் தான் கிடைக்கும். விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும். மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். அதிமுக ஆட்சிக்கு வருவதைவிட பொதுச்செயலாளர் பதவியை விட்டுவிடக் கூடாது என பழனிசாமி நினைக்கிறார்.
24
துரோகத்தை வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன்
என்றுமே டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம்தான். துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓயமாட்டேன். எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என டிடிவி.தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பாருங்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்று.
34
யார் துரோகம் செய்தார்கள்
ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இணைந்தால் அவர் உரிமை கோரி வழக்கு சரியாக செல்லாது. எடப்பாடி பழனிசாமியை எளிதில் விட்டது போல இருக்கும். தற்போது செங்கோட்டையன் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். அவரும் அவரது பணியை செய்து கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் துரோகம் செய்தார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் துரோகம் செய்தார்கள் என்பது உலகத்திற்கே தெரியும்.
கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள். கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார். அந்த சமயத்தில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன். எடப்பாடி பழனிசாமி கொடநாடு பங்களாவுக்கு போய் கோப்புகளை தேடி கொண்டிருந்தார். கொடநாடு பங்களாவில் எந்த ஃபைலை தேடினார்கள். முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கோப்புகளை படித்து பார்த்து நானும், மருத்துவர் வெங்கடேசும் கிழித்து எரித்தோம். கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது? அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் லீலா வினோதங்கள் அந்த பச்சைக் கவரில் இருந்தன. என்னை கட்சியை விட்டு நீக்கியதால் அவற்றை நான் வெளியே விட்டு விடுவேன் என பழனிசாமி பயந்துவிட்டார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.