தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த எதிரணியின் வாக்குகள் ஒருங்கிணைக்க அதிமுக முயன்று வருகிறது. இதற்காக பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் பாஜக கூட்டணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விலகியுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24
அண்ணாமலை டிடிவி சந்திப்பு
இந்த நிலையில், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரும் படி அழைப்பு விடுத்தார். “அரசியலில் எப்போதுமே இப்படித்தான்; சின்ன சின்ன மனஸ்தாபங்கள் தேர்தலின்போது மாறும். எனவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஞாயிற்றுக்கிழமை மாலை எனக்கு போன் செய்துவிட்டு என்னை பார்ப்பதற்காக அண்ணாமலை வீட்டிற்கு வந்தார்.
34
அண்ணாமலையுடன் பேசியது என்ன.?
என்னுடன் சந்திப்பு தொடர்பாக தொலைக்காட்சியில் என்ன பேட்டியில் சொன்னாரோ அதைத்தான் என்னிடமும் பேசியிருந்தார். அதைத் தாண்டி நட்பு ரீதியிலான முறையில் ஒரு மணி நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும் பேசு வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதையும் தாண்டி பேசினோம். அண்ணாமலை கூட அடுத்த வாரம் கேரளாவுக்கு சென்று விட்டு இலங்கை செல்ல இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறினார்.
பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை முயற்சியின் காரணமாகத்தான் பாஜக கூட்டணியில் அமமுக இணைந்தோம். நானும் அண்ணாமலையும் அடிக்கடி தொலைபேசி பேசிக் கொள்வோம். கூட்டணியில் இருந்து விலகிய பிறகு அவரும் தொலைபேசியில் பேசி வந்தார். அவசரப்பட வேண்டாம் எனவும் கூறி வந்ததாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அண்ணாமலை வேண்டுகோளை மறுபரீசீலனை செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், மறு பரிசீலனை செய்ய முடியுமா செய்ய முடியாதா என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளர் என்கின்ற முறையில் பாஜக கூட்டணியில் அவர் தொடரும் பட்சத்தில் மறுபரிசனை செய்வது என்பது முடியாத காரியம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.