எக்மோரில் இருந்து ரயில் புறப்படாது.! மதுரை ராமேஸ்வரம் பயணிகளுக்கு அலர்ட்- புதிய லிஸ்ட் இதோ

Published : Sep 05, 2025, 07:51 AM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பல ரயில்களின் புறப்படும் இடம் தாம்பரம் மற்றும் சென்னை பீச் ரயில் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

PREV
15
தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை

நாள் தோறும் பல லட்சம் பயணிகள் சென்னைக்கு வந்து திரும்பி சென்றுகொண்டுள்ளனர். அந்த வகையில் தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், காரைக்குடி, செங்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே ஒரு சில பிளாட்பாரங்களில் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது.

25
எழும்பூரில் மறு சீரமைப்பு பணி

இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி காரணமாக எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர் திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்துக்கு செல்லும் சேது மற்றும் போட் மெயில் எக்ஸ்பிரஸ், மும்பைக்கு செல்லும் சி எஸ் எம் டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் புறப்படும் இடம் தாம்பரம் மற்றும் சென்னை பீச் ரயில் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

35
தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் (12654- 12653) ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் வருகின்ற 11ஆம் தேதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருச்சியில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக என்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12638), வருகின்ற 10ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் இருந்து எழும்பூர் வரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்பட்டு வந்த திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் (Train No.22675)வருகின்ற 11-ம் தேதியில் இருந்து தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
ராமேஸ்வரம் ரயில் சேவை மாற்றம்

இதே போல ராமேஸ்வரத்திற்கு செல்லும் (Train No. 22662- 22661 ) ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் வருகின்ற 10 தேதி முதல் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு ராமேஸ்வரம் ரயிலான போட் மெயில் (Train No. 16752-16751) ரயிலும் தாம்பரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த சேது மற்றும் போட் மெயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
2 மாதங்களுக்கு ரயில் சேவை மாற்றம்

அடுத்ததாக சென்னை எழும்பூரில் இருந்து மும்பை வரை இயக்கப்படும் மும்பை CSMT எக்ஸ்பிரஸ் சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷன் இருந்து வருகின்ற 11ஆம் தேதி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழும்பூர் ரயில் நிலையில பராமரிப்பு காரணமாக சுமார் இரண்டு மாத காலத்திற்கு இந்த ரயில்கள் தாம்பரம் மற்றும் சென்னை பீச் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் எனவும் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இருந்து மீண்டும் எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more Photos on
click me!

Recommended Stories