தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டிடிவி, ஓபிஎஸ் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அண்ணன் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எனது எந்த தொகுதியும் தேவையில்லை, சீட்டு தேவையில்லை கூட்டணியின் பலத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் அவர் நமது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
24
பிரதமர் மோடியின் மீது அன்பு
அதே போன்று ஒரு முன்னாள் முதல்வர் தனி சின்னத்தில் போட்டியிட்டார் என்பது இந்தியாவிலேயே ஓ.பன்னீர்செல்வமாக மட்டும் தான் இருப்பார். பிரதமர் நரேந்திர மோடியின் மீதான பற்றின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமது கூட்டணியில் இரு தலைவர்களும் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இருவரும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
34
திமுக.வை வீழ்த்துவதே நோக்கம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள், பல்வேறு அணிகள் இடம் பெற்றுள்ளன. எங்கள் அனைவரது ஒரே நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டும், 2026ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் அதே நோக்கத்தோடு நாம் பயணிக்க வேண்டும் என்றார்.
மேலும் அண்மையில் நடைபெற்ற மூப்பனார் நினைவு தின விழாவில் டிடிவி தினகரன் அவர்களுக்கு ஜிகே வாசன் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார். அது எனக்கு தெரியும். ஆகவே அவர் நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கவில்லை, அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கூட்டணிக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் கலையப்படும் என்று தெரிவித்தார்.