இனி 100 ரூபாய்க்கு சொகுசான ரூமில் தங்கலாம்.! திருச்செந்தூரில் ரெடியான சூப்பர் பிளான்

First Published | Oct 9, 2024, 12:47 PM IST

வெளியூர் சுற்றிப்பார்ப்பது அனைவருக்கும் பிடித்தமான ஓன்று, ஆனால் தங்கும் விடுதி கட்டணத்தை கேட்டால் மட்டும் தான் தலை சுற்றும். இந்த நிலையில் திருச்செந்தூர் வரும் சுற்றுலா பயணிகளுக்காக குறைந்த விலையில் விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது

சுற்றுலா பயணம்- ஓட்டல் கட்டணம்

நாளுக்கு நாள் ஓடிக்கொண்டிருக்கும் கடிக்கார முட்களை போல மனிதர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வு கிடைக்கும் போது குடும்பத்தோடு நேரத்தை கழித்து வருகின்றனர். அதே நேரத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைத்தால் கேட்கவா வேண்டும் உடனடியாக வெளியூருக்கு பறந்து விடுவார்கள். இதில் பயண கட்டணம் ஒரு பக்கம் என்றால், தங்கும் விடுதி கட்டணமும் ஆயிரக்கணக்கில் பறித்து விடும். இதன் காரணமாகவே ஏராளமான மக்கள் வெளியூரில் ஓட்டல் அறையில் தங்கவே பயப்படுவார்கள். மேலும் கோயில்களுக்கு சென்றால் இரவு தங்கி அதிகாலையில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.

தமிழகத்தில் கோயில்கள்

ஆனால் ஓட்டல் அறை கட்டணத்தால் இரவோடு இரவாக சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக 100 ரூபாய்க்கு ஓட்டல் அறையில் தங்கும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆன்மிக தளமாக விளங்கி வருகிறது. ராமேஸ்வரம் தொடங்கி சென்னை வரை ஆயிரக்கணக்கான பிரபலமான கோயில்கள் உள்ளது.

இந்த கோயில்களை  பார்ப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்,  சென்னை பார்த்தசாரதி, சென்னை கபாலீஸ்வரர் கோயில் என பிரசித்த பெற்ற கோயில்கள் உள்ளது.

10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வேண்டுமா.! தமிழக அரசின் சூப்பர் திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Latest Videos


குறைவான கட்டணத்தில் தங்கும் விடுதி

இந்த கோயில்களுக்கு நாள் தோறும் பல ஆயிரம் மக்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஒருநாள் கோயில் சு்ற்றியுள்ள பகுதியில் தங்கி தரிசனம் செய்தவதற்கு ஏதுவாக போதிய விடுதிகள் இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சியின் போது முதல்வராக ஜெயலலிதா  இருந்தபோது  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க ஏதுவாக பல அறைகள் கொண்ட ‘யாத்ரி நிவாஸ்’ கட்டப்பட்டது.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக யாத்ரி நிவாஸ் விடுதி கட்டப்பட்டது.

srirangam

திருச்செந்தூரில் யாத்ரி நிவாஸ்

மலிவான கட்டணத்தில் ஏராளமான பக்தர்கள் நாள் தோறும் தங்கி செல்கின்றனர். இதே போன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ‘யாத்ரி நிவாஸ்’ கட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக யாத்ரி நிவாஸ் கட்டிட கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. 


 விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர்க்கு வரும் நிலையில் அங்கு 24 அறைகள் கொண்ட செந்தூர் முருகன் விடுதியும், குளிர்சாதன வசதியுடன் 14 அறைகள் கொண்ட கந்தன் விடுதியும் 5 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகையும் பக்தர்கள் தங்கும் விடுதிகளாக உள்ளன. இதனால் தனியார் ஓட்டலில் பக்தர்கள் அதிக கட்டணம் கொடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு 33 கோடியில் யாத்ரி நிவாஸ் விடுதிகள் கட்டப்படுமென அறிவிக்கப்பட்டது. .

தனியாருக்கு இணையாக 50 கோடியில் யாத்ரி நிவாஸ்

இதனையடுத்து கொரோனா பாதிப்பின் காரணமாக பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.  இதனையடுத்து 2020ம் ஆண்டு யாத்ரி நிவாஸ் கட்டடப்பணிகள் தொடங்கியது. இதனையடுத்து 2023ஆம் ஆண்டில் கூடுதலாக 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் தனியார் விடுதிகளுக்கு இணையாக நவீன வசதியுடனும், டார்மென்டரி ஹால் போன்றவைகளும் கட்டப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் கோயிலில் 2 பகுதிகளாக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் பல்வேறு சிறப்பசம்சம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள், 10 மற்றும் 6 படுக்கை கொண்ட 28 பெரிய அளவிலான தங்குமிடம் மற்றும் 20 குடில்களும் கட்டப்பட்டு உள்ளது.

குறைந்த கட்டணத்தில் தங்கலாம்

வருகிற நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற விழாக்களுள் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து  சூரசம்ஹாரம், நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே யாத்ரி நிவாஸ் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். 

அதன் படி, யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில், 2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய  டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தனியாக செல்லக்கூடிய நபர் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!