பெட்டி பெட்டியாக வந்த தக்காளி.! கிடு,கிடுவென குறைந்த விலை- ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

First Published Oct 9, 2024, 10:18 AM IST

புரட்டாசி மாதத்தில் காய்கறி விலைகள், குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறைவான விலையில் பண்ணை பசுமை கடைகளில் குறைவான விலையில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை என்ன.?

சமையலுக்கு காய்கறிகள் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் சைவ பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலையானது அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காய்கறிகளிலையே முக்கிய பயன்பாடாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும்.

இதன்  விலையானது தான் கிடு, கிடுவென உச்சத்தை அடைந்துள்ளது.   சமையலுக்கு இந்த இரண்டு காய்கறிகள் தான் மிகவும் அடிப்படை தேவையாக உள்ளது. எனவே தக்காளி விலை உயர்வால் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சட்னி உள்ளிட்ட அதனை சார்ந்த உணவு பொருட்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி, வெங்காயம் விலை

மேலும் காய்கறி சந்தைகளில் 3 முதல் 5 கிலோ வாங்கி செல்லப்பட்ட தக்காளி மற்றும் வெங்காயம் அரைக்கிலோ முதல் ஒரு கிலோ மட்டுமே வாங்கி செல்கின்றனர். பண்டிகை காலம் விளைச்சல் பாதிப்பால் காய்கறிகளின் வரத்து குறைவு போன்ற காரணங்களால் தமிழகத்தில் கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய அதிகப்படியான வெப்பம் மற்றும் மழைப்பொழிவு காரணமாக நடப்பாண்டு காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பு காரணமாக வழக்கமாக 22 முதல் 30 லாரிகளில் வரும் தக்காளி சரிபாதியாக குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos


விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

மேலும் இறக்குமதி செய்யப்படும் குறைந்தபட்ச தக்காளியில் தரம் மலிவாக இருப்பதும் விலை ஏற்றத்துக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்,  மேலும் வரும் நாட்களிலும் தக்காளியின் விலை உயரவே வாய்ப்பு இருப்பதாகவும் அண்டை மாநிலங்களில் புதிய பயிர் விளைச்சல் காணும் வரை தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்தநிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் இன்று முதல் தக்காளி, வெங்காயம் விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும், வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த விலையில் விற்பனை

3000 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருவதாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையின் மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படும் என கூறினார். காய்கறி சந்தையில் விலை குறையும் வரை பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார். 

வண்டி, வண்டியாக தமிழகத்திற்கு வரும் வெங்காயம்.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளான பீன்ஸ் கிலோ 110 ரூபாய்க்கும் , கேரட் 45 ரூபாய்க்கும், பீட்ரூட் வெண்டைக்காய் ஆகியவை தலா 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படு்கிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60  ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

click me!