செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குப்பை கொட்டுபவர்களுக்கு நூதன தண்டனை, அமெரிக்காவின் புதிய AI போர் விமானம் அறிமுகம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதில் அடங்கும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
210
மோடிக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்
தமிழகத்தில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் அனைவருக்கமான பிரதமர் என்ற மாண்பை இழந்துவிடாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
310
பொது இடங்களில் குப்பை கொட்டுபவரா நீங்கள்..?
பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் (BSWML), பெங்களூரு கிரேட்டர் ஆணையத்துடன் (GBA) இணைந்து, பொது இடங்களில் மீண்டும் மீண்டும் கழிவுகளை கொட்டும் சுமார் 200 வீடுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, குடிமைப் பணியாளர்கள் அக்டோபர் 30 அன்று தெருக்களில் இருந்து குப்பைகளைச் சேகரித்து, வழக்கமாகக் குற்றவாளிகளின் வீடுகளுக்கு வெளியே கொட்டினர். இந்த தனித்துவமான “குப்பைத் திரும்பப் பெறுதல்” பிரச்சாரம், குடியிருப்பாளர்களைப் பொறுப்பேற்கச் செய்வதையும், குற்றவாளிகள் தங்கள் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ளச் செய்வதன் மூலம் குப்பைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்ததற்கு தான் காரணமில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். தன் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் தெரிவித்தார்.
510
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதில், பேரவையில் இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாகப் பொறுப்புடைமை மசோதாவும் அடங்கும்.
610
அரசியலுக்கு குட்பை சொன்ன சஞ்சய் ராவத்
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் (Sanjay Raut), தீவிர உடல்நலக் குறைவு காரணமாகத் தற்காலிகமாகப் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார்.
தனது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளதாகவும், அதற்கான சிகிச்சை நடந்து வருவதாகவும் சஞ்சய் ராவத், தனது ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கடிதத்தின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
710
அமெரிக்காவின் ஆளில்லா ஜெட் X-BAT!
போர் விமானப் போக்குவரத்தின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஷீல்ட் AI (Shield AI), உலகிலேயே முதல் முழுமையான தானியங்கி போர் விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. செங்குத்தாகப் புறப்பட்டு, அப்படியே தரையிறங்கும் (VTOL) திறன் கொண்ட இந்த போர் விமானம் AI அமைப்புடன் செயல்படுகிறது.
'X-BAT' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், ஓட்டுநர் இன்றி, பாரம்பரிய ஓடுபாதையும் இல்லாமல் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கி வசதிகளுடன் பாரம்பரிய விமானங்களால் அணுக முடியாத இடங்களிலிருந்தும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.
810
அமைச்சராக பதவியேற்றார் முகமது அசாருதீன்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், இன்று தெலங்கானா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.பதவியேற்ற பிறகு, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அசாருதீன் நன்றி தெரிவித்தார். சக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
910
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளின் இறுதி தேதித்தாளை வெளியிட்டுள்ளது. இந்த முறை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச தேதித்தாள் குறித்து பள்ளிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பிறகு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இப்போது இறுதி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
1010
ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. புயல் வேக பந்துவீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார்.