
கந்தக்கோட்டம் கோயில் நிலத்தில் கோயில் நிதியை கொண்டு வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் கோயில் நிலத்தில் வணிக வளாங்கள் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புதிய பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியைக் கூர்மையாகக் குறைக்க வாய்ப்புள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நெல் ஈரப்பத வரம்பை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக தளர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்ததது. இந்நிலையில், தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க மத்தியக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
த்திய உணவுக்குழு இயக்குநர் தலைமையில் 9 பேர் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்படுள்ளது. இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து 3 குழுக்களாக ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஈரப்பதம் மிக்க நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்வார்கள்.
தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு தினசரி மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் நல வாரியம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்துள்ள தமிழக அரசு, அவர்களுக்குக் கூடுதலாகப் பல்வேறு நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
டெல்டா பகுதிகளில் விவசாயிகள் படும் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு கோமாளித்தனமாகச் செயல்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக அரசு ஃபெயிலியர் மாடல் அரசு எனவும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கடுமையாக மறுத்தார்.
தீபாவளிப் பண்டிகையின்போது பயன்படுத்தப்பட்ட ஆபத்தான கால்சியம் கார்பைடு குழாய் துப்பாக்கிகள் (Calcium Carbide Pipe Guns) வெடித்ததில், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் 8 முதல் 14 வயதுக்குபட்டவர்கள்.
தீபாவளிக்கு மறுநாள் போபால் முழுவதும் கார்பைடு துப்பாக்கிகள் தொடர்பான 150-க்கும் மேற்பட்ட காயம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் சேவா சதன் மருத்துவமனையிலும், மற்றவர்கள் ஹமீடியா மருத்துவமனை, ஜே.பி. மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடிக்கு எதிராக ஆவேசமாக பொங்கியெழுந்த செங்கோட்டையன் அதன்பின்பு அமைதியானது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''அதிமுக ஒன்றிணைவது குறித்து நான் கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு ஏதும் விதிக்கவில்லை" என்றார்.
தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் நிலையில், மலைப் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் போதிய சாலை வசதிகள், பாலங்கள் இல்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.78,000 கோடி எங்கே சென்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே. பொன்னுசாமி (70) மாரடைப்பால் காலமானார். இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ச. சந்திரனை 10,493 வாக்குகள் வித்திசாயத்தில் வென்றார்.