onion
வெங்காயம் உற்பத்தி பாதிப்பு
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. காய்கறிகள் இல்லாமல் சமைப்பது என்பது கடினமான காரியம். இல்லத்தரசிகளுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் தான் முக்கியமான காய்கறியாக உள்ளது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றின் விலை கூடினாலும் வீட்டில் தக்காளி சட்னி, வெங்காய சட்னி கட்டாகிவிடும்.
இதே போல வெங்காயமும் அத்தியாவசிய உணவு பொருட்களாக உள்ளது. பொரியல், சாம்பார் என எந்த உணவு சமைப்பதாக இருந்தாலும் வெங்காயம் இல்லாமல் சமைத்தால் உணவின் ருசியும் மங்கிவிடும். இந்த நிலையில் வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்தது.
ONION
உயர்ந்த வெங்காயம் விலை
கன மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் குறைந்ததையடுத்து பெரிய வெங்காயத்தின் விலையானது கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை அடைந்தனர். வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெங்காயத்தை சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
onion
ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்
விரைவில் சென்னை, மதுரை,கோவை போன்ற நகரங்களிலும் விற்பனையை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் ஒரு பக்கம் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், தக்காளியின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. அந்த வகையில், தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக குறிப்பாக தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, டி புதூர், மூணாண்டிப்பட்டி, சித்தார் பட்டி போன்ற இடங்களில் பல்வேறு கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மழையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் தக்காளியின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. .
தக்காளி விளைச்சல் அதிகரிப்பு
ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் வரை 100 ரூபாய் வரை சில்லறையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சந்தைக்குவரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
tomato
விவசாயிகள் அதிர்ச்சி- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இது வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 14 கிலோ எடை கொண்ட பெட்டியானது 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 14 கிலோ எடை கொண்ட பெட்டி 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்றனர். தக்காளியின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது அதே நேரத்தில் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காய்கறி விலை என்ன.?
இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலையை தற்போது பார்க்கலாம். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை என்ன.?
வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 20-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.