அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை.!14,000 ரூபாய் உதவித்தொகை- விண்ணப்பிக்க அழைப்பு

First Published | Sep 11, 2024, 1:20 PM IST

தமிழக அரசு ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் தொழில் பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த பயிற்சி மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடு

தமிழகத்தில் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மூலம் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைக்கு ஏற்பாடு செய்ய  வேலை வாய்ப்பு முகாமையும் நடத்தி வருகிறது.

இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பிரபல தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்தில் தொழிற்சாலையிலும் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலங்களில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரசு பணிக்கு தேர்வு

மேலும் தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையோடு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டது. இது மட்டுமில்லாமல் அரசு பணியில் சேரும் ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் 75ஆயிரம் பணியிடங்கள் நிரப்பவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Latest Videos


இளைஞர்களுக்கு பயிற்சி

 இதே போல சொந்தமாக தொழில் தொடங்க விருப்பும் இளைஞர்களுக்கும் தமிழக அரசு சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பேக்கரி தொழில் தொடங்குவது, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பது. டிஜிட்டல் தொழில் துறை உள்ளிட்டவைகள் தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் தமிழக அரசு பணி மட்டுமின்றி மத்திய அரசு பணி, ரயில்வே பணிகளுக்கு இளைஞர்களை தயார் படுத்தும் வகையிலும் தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் சேர்க்கையில் மாணவர்கள் இணையவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் 10வது அல்லது 12வது முடித்து தொழிற்கல்வியான ஐடிஐ படித்த மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஊக்கத்தொகையோடு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து கழகத்தில் பயிற்சி

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2024-2025-ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 26.09.2024 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மூகாமில் விண்ணப்பிக்கலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

cng Government Bus

14ஆயிரம் ரூபாய் உதவி தொகை

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ITI பிரிவுகளில்  (Mechanic Motor Vehicle. Mechanic Diesel. Electrician. Auto Electrician, Fitter, Turner. Painter & Welder) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14.000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு. 26.09.2024 அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மூகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!