ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!!! எதிர்பாரா உச்சத்தை தொட்ட விலை- ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்

Published : Jul 23, 2025, 08:21 AM ISTUpdated : Jul 23, 2025, 11:13 AM IST

தமிழகத்தில் தக்காளி மற்றும் பிற காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் தக்காளி வரத்து குறைந்ததே விலை உயர்விற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
15
சமையலும் காய்கறிகளும்

காய்கறிகள் தமிழக உணவு முறையில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. காய்கறிகள் உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப, கால்சியம், இரும்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்கி உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றன. காய்கறிகள் உணவுக்கு சுவை, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை வழங்குகின்றன. முக்கியமாக சாம்பார், ரசம், குழம்பு, சட்னி, பொரியல், கூட்டு மற்றும் பல உணவு வகைகளில் தக்காளி முக்கிய பொருளாக உள்ளது. 

இது உணவுக்கு சுவையையும், வைட்டமின் சி, லைக்கோபீன் போன்ற சத்துக்களை வழங்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குழம்பு, கறி, பொரியல், பிரியாணி போன்றவற்றில் வெங்காயம் இல்லாமல் சமையலை நினைத்துப் பார்க்க முடியாது. இது உணவுக்கு இனிப்பு மற்றும் மணத்தை சேர்ப்பதுடன், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளை வழங்குகிறது.

25
காய்கறிகளில் சத்துக்கள்

இதே போல கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவை உணவுக்கு சத்து மற்றும் பல்வேறு மருத்துவ குணங்களை வழங்குகின்றன. தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் தமிழக சமையல் முழுமையடையாது. இவை அனைத்து வகையான உணவுகளிலும், குறிப்பாக தினசரி உணவான சாம்பார், ரசம், கறி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இல்லையெனில், உணவின் சுவையும் தோற்றமும் பாதிக்கப்படுவதுடன், சமையல் செலவு மற்றும் நேரமும் அதிகரிக்கிறது. இல்லத்தரசிகள் இவற்றை தவிர்க்க முடியாமல், பை நிறைய வாங்கி செல்கின்றனர்,

35
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை

கடந்த சில ஆண்டுகளாக, தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் இல்லத்தரசிகளுக்கு பெரும் சவாலாக உள்ளன. பருவநிலை மாற்றங்கள், விளைச்சல் குறைவு, மழை, வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு போன்றவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 2024 அக்டோபரில் தொடர் மழையால் தக்காளி விலை ஒரு கிலோ 120 ரூபாயையும், வெங்காயம் 100 ரூபாயையும் தொட்டது. தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வால், இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பற்றாக்குறை ஏற்படுகிறது.

45
மீண்டும் அதிகரித்த தக்காளி விலை

இதனையடுத்து 2025 ஜனவரி மாதங்களில், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் தக்காளி விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த இரண்டு தினங்களாக தக்காளி விலை கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுவே வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் தக்காளி வரத்து குறைந்ததே விலை உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் தக்காளி வரத்தை பொறுத்து விலையானது நிர்ணயிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

55
பச்சை காய்கறிகளின் இன்றைய விலை என்ன.?

இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து வருகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 

அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் இஞ்சி ஒரு கிலோ 60 க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories