அதிமுக ஆட்சியில் திருமா துணைமுதல்வர்...? அப்செட்டில் ஸ்டாலின்! EPS போட்டுடைத்த பகீர் தகவல்

Published : Jul 23, 2025, 07:24 AM IST

அதிமுக, பாஜக.வுடன் கூட்டணி வைத்ததால் மு.க.ஸ்டாலின் அப்செட்டில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

PREV
15
பிரசாரத்தில் தீவிரம் காட்டும் எடப்பாடி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

25
அதிருப்தியில் ஸ்டாலின்

அதன்படி தஞ்சையில் நேற்று தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி பாஜக.வுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளார். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது சட்டமன்ற தொடரில் திடீரென இருக்கையில் இருந்து எழுந்த முதல்வர், நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தானே சொன்னீர்கள் பின்னர் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

35
ஸ்டாலின் திமுகவில் தான் இருக்கிறாரா?

முதல்வர் ஸ்டாலின் திமுகவில் இருக்கிறாரா? அதிமுகவில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் உங்களுக்கு என்ன எரிச்சல்? 2026ல் திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். அதே நோக்கத்தோடு தான் பாஜகவும் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.

45
ஜால்ரா கட்சிகள்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட மறுக்கின்றன. மாறாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடித்து வருகின்றன. இப்படி நடந்து கொள்ளும் கட்சிகள் அடுத்த ஆண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தே ஆக வேண்டும்.

55
திருமாவுக்கு துணை முதல்வர் பொறுப்பு?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனுக்கு அதிமுக கூட்டணியில் துணைமுதல்வர் பொறுப்பு வழங்குவதாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் கூறுகிறார். ஆனால் அது முற்றிலும் பொய். அப்படி ஒரு பேச்சு வார்த்தை எப்போது நடைபெற்றது என திருமாவால் சொல்ல முடியுமா? எங்களை வைத்து நீங்கள் அடையாளம் தேடிக்கொள்ள நினைக்காதீர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் முழுவதுமாக விழுங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories