ஜூலை 28ம் தேதி விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!

Published : Jul 22, 2025, 09:10 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆடிப்பூர விழாவையொட்டி ஜூலை 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாவட்டத்திற்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PREV
14

தமிழகத்தில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதங்களில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் உள்ளிட்ட கோவில் திருவிழாக்கள் வரிசைக்கட்டி வரும். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதால் ஒரே கொண்டாட்டம் தான். இதில் குறிப்பிட்ட மாவட்டங்களில் திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

24

இந்நிலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஜூலை 28ம் காலை நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

34

ஆகையால் அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது அனைத்து பள்ளி, கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த விடுமுறையன்று மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா திருவிழாவையொட்டி ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories