உச்சத்தை தொட்ட தக்காளி விலை.! ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.? காய்கறிகளின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

First Published | Jun 14, 2024, 9:04 AM IST

பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காய்கறிகளின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு குறைவான அளவே காய்கறிகள் வந்துள்ளது. இதனால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

சுரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

Latest Videos


வெள்ளரிக்காய் விலை என்ன.?

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 55 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

DA Hike: அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
 

Vegetables Price Koyembedu

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

click me!