- Home
- Gallery
- DA Hike: அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

CM Stalin
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Tamilnadu Government
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
DA Hike
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் இந்த தொகை என்பது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Government Employees
இது அனைவருக்குமான டிஏ கிடையாது. 2016-ம் ஆண்டுக்கான முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.